தமிழக சட்டப்பேரவை கூட்டம் - ஆளுநர் ரவிக்கு அப்பாவு அழைப்பு | TN Assembly | Appavu | R.N.Ravi

Update: 2025-01-05 03:27 GMT

ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருக்கிறது. அந்த வகையில் திங்கள் கிழமை கூடவிருக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் ஆளுநருக்கு பேண்டு வாத்தியம் முழங்க, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. தொடர்ச்சியாக ஆளுநர் உரையாற்றுவார். செவ்வாய்கிழமை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து 2, 3 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இப்படி முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்து சென்றதால், இம்முறை ஆளுநர் உரையை அப்படியே வாசிப்பாரா? புறக்கணிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்