நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம் | Erode
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூர், நொச்சிக்குட்டை ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களும் நல்லூர் மற்றும் நொச்சிக்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன்பெற முடியாது எனக் கூறிய கிராம மக்கள், தங்கள் ஊராட்சிகளை நகராட்சி உடன் இணைக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.