"இருப்பா நல்லா சீவிக்குறேன்.." பயணியை பஸ்ஸில் ஏற்றாமல் திமிர் பேச்சு | Chennai | Bus

Update: 2025-01-05 03:19 GMT

புதுச்சேரி செல்லும் அரசு பேருந்தில், மாமல்லபுரம் பயணிகளை ஏற்ற முடியாது என அடாவடியாக பேசிய நடத்துனரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சென்னை கிண்டியில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்தில், மாமல்லபுரம் செல்ல இருந்த பயணியை நடத்துனர் ஏற அனுமதிக்காததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தபோது, தலையை வாரியபடி நடத்துனர் அடாவடி செய்ததாக தெரிகிறது. நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்