கேம் சேஞ்சர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில், சிறப்பு காட்சிகளுக்கு ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கும் நள்ளிரவு ஒரு மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படவுள்ளது. மேலும், காலை நான்கு மணி காட்சிக்கு டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக நூற்றி எழுபத்தைந்து ரூபாயும், நள்ளிரவு காட்சிக்கு டிக்கெட் கட்டணமாக அறுநூறு ரூபாயும் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.