ரவுடியை ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல் - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி

Update: 2023-06-06 08:50 GMT

சென்னை அடுத்த மதுரவாயலில், ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த திருட்டு ராஜேஷ் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மதுரவாயல் கந்தசாமி நகரில் திருட்டு ராஜேஷ் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை துரத்திச் சென்று, சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது . தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்