திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு பேச பேச, சேர்மன் அன்பரசி கண்ணீர் விட்டு அழுது நன்றி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நுழைவாயில் வளைவை அமைச்சர் திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.