ஒருவரை ஒருவர் கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்ட மக்கள் - நவராத்திரி பூஜையில் வெடித்த கலவரம்

Update: 2022-10-03 04:58 GMT

ஒருவரை ஒருவர் கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்ட மக்கள் - நவராத்திரி பூஜையில் வெடித்த கலவரம் மத்திய பிரதேசத்தில் நவராத்திரி பூஜையின் போது வெடித்த கலவரத்தில், இரு சமூகத்தினர் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகார் மாவட்டத்தில் உள்ள கன்கர் கிராமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பூஜையில் ஏராளமான மக்கள் பங்கேற்ற நிலையில், நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அங்கு வெடித்த கலவரத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கட்டைகளால் தாக்கி கொண்டனர். தகவலறிந்து விரைந்த போலீசார், இரு தரப்பினரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில், கோயில் விழாவில் ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்ததால் கலவரம் வெடித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்