தாத்தாவிற்கு நேர்ந்த துயரம் - நடுரோட்டில் பேரன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
குண்டும் குழியுமாக இருந்த சாலையில் தனது தாத்தா விபத்திற்குள்ளானதால், வேறு யாரும் இது போல் அடிபடாமல் இருக்க சிறுவன் ஒருவன் தனி ஆளாக சாலையை சீரமைத்த சம்பவம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையானது கடந்த 7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் சேகர், இந்த சாலையில் விபத்து ஏற்பட்டு காயமடைந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் படிக்கும் இவரது பேரனான 8ம் வகுப்பு மாணவர் மாசிலாமணி, தன் தாத்தாவைப் போல் வேறு யாருக்கும் அடிபடவோ, உயிர் சேதமோ ஏற்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சிதிலமடைந்த சாலையை தன் சகோதரனை துணைக்கு வைத்துக் கொண்டு தனி ஆளாக சீரமைத்து அசத்தியுள்ளார்.