காதலுக்கு 'NO' சொன்ன பெற்றோர்.. சமையல் அறையில் கேட்ட அலறல் சத்தம் - சென்னையில் அரங்கேறிய சோகம்

Update: 2023-06-08 11:58 GMT

சென்னையில் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி. கல்லூரி மாணவியான இவர், மாத்தூர் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில் ஆர்த்தியின் வீட்டின் அருகே மகேஷ் நின்றதாகவும்,

இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தியின் சகோதரர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மகேஷை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஆர்த்தி அதிகாலை நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குதானே தீ வைத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் உடனடியாக ஆர்த்தியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்