தவிக்கவிட்ட தாய்... தந்தையாக மாறி அரவணைத்த மருத்துவர் - ஆஸ்கர் புகழ் குட்டி பொம்மி யானையின் கண்ணீர் ஸ்டோரி

Update: 2023-03-14 02:29 GMT
  • எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ள நிலையில் அந்த படத்தில் இடம் பெற்ற பொம்மி யானை கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள ஆசனூர் வனச்சரகத்தில் தாயை விட்டு தனியே பிரிந்தது.
  • சோர்வடைந்த நிலையில் வனப்பகுதி சாலையில் சுற்றி திரிந்த அந்த பெண் குட்டி யானையை வனத்துறையினர் தாய் யானையிடம் சேர்க்க மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்க வில்லை.
  • இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்த மருத்துவர் அசோகன், குட்டி யானையை மீட்டு காராச்சி கொரையில் உள்ள வன கால்நடை மையத்திற்கு கொண்டு வந்தார்.
  • குட்டி யானையை தனது குழந்தை போல் பாவித்து அதற்கு சிகிச்சை அளித்து தினமும் பால் மற்றும் லேக்டோஜன் உள்ளிட்ட திரவ உணவுகளை அவர் அளித்து வந்தார்.
  • பெண்குட்டி யானைக்கு அம்முக்குட்டி என பெயரிட்டு தினமும் நடை பயிற்சிக்கு அசோகன் அழைத்து சென்றார்.
  • அம்மு குட்டி யானை உடல் நலம் தேறியதும் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாகன் பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • அதன் பிறகு அம்முக்குட்டி என்ற அந்த குட்டி யானையின் பெயர் பொம்மியாக மாறியது. 
Tags:    

மேலும் செய்திகள்