முன்னாள் திமுக அமைச்சர் சுந்தரத்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Update: 2024-09-19 16:49 GMT

கருணாநிதி அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்த க.சுந்தரம் நேற்று மாலை காலமானார். முதலமைச்சர் ஸ்டாலினுடன், திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் உடலுக்கு அதிமுக உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்