பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு 'ஆச்சி' குழும தலைவர் நன்றி | MK Stalin | BJP

Update: 2024-09-19 16:46 GMT

உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கும், வழிகாட்டுதல்களையும், ஒத்துழைப்பும் வழங்கி வரும் தமிழ்நாடு அரசுக்கும், ஆச்சி உணவுக் குழுமத்தின் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக் நன்றி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய ஏ.டி.பத்மசிங் ஐசக், உற்பத்தியை பெருக்கி மத்திய அரசிடம் இருந்து ஊக்கத்தொகையை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் ஆச்சி நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் அஸ்வின் பாண்டியன், அபிஷேக் ஆப்ரஹாம் மற்றும் பணியாளர்களுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்