"தலித் என்பதால் வீடு கட்ட எதிர்ப்பு" "மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு" - கண்ணீர் விட்டு கதறும் கூலித்தொழிலாளி
தலித் என்பதால் ஊருக்குள் வீடு கட்டிக்கொள்ள ஊராட்சி மன்றதலைவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் இடைஞ்சல் செய்வதாக பெண் கூலித்தொழிலாளி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லம்மாள் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தலித் என்பதால் ஊருக்குள் வீடு கட்டக்கூடாது என்று தன்னை மிரட்டியதுடன், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை அவர்கள் துண்டித்து விட்டதாகவும் நல்லம்மாள் குற்றம் சாட்டியுள்ளார்.