இந்திய இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே பப்ஜி விளையாட்டு பிரபலமாக இருந்து வந்த நிலையில், பப்ஜி செயலி தரவுகளை சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு பப்ஜி விளையாட்டை தடை செய்தது.
இந்தநிலையில் பப்ஜி விளையாட்டு பல்வேறு மாற்றங்களோடு, இந்தியாவில் இன்று முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது.
ஆண்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்கள் இன்று முதல் பப்ஜி விளையாட்டை விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பப்ஜி செயலியின் சர்வர், தரவு பாதுகாப்பு போன்ற அம்சங்களில் மாற்றம் செய்து விதிகளுக்கு இணங்கியுள்ளதால், 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பப்ஜி விளையாட்டிற்கு அனுமதியளித்துள்ள மத்திய அரசு, பப்ஜி செயலியின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது