விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு கிராம வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் அலாரம் சத்தம் கேட்டதாக வங்கி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் உள்ளே சென்று பார்க்கும் போது, ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைத்தனர். வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.