துப்பாக்கி, பீரங்கியை அக்குவேர் ஆணிவேராக பிரித்து.. டெமோ காட்டிய ராணுவம்...
கோவை மாவட்டம் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கி மற்றும் பீரங்கி கண்காட்சி நடைபெற்றது. இங்கு மதுக்கரையில் இருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை காட்சிப்படுத்தி இருந்தனர். அப்போது அந்த ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ராணுவ வீரர்கள் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.