"அசால்டா விட்றாதீங்க..எச்சி கூட டேஞ்சர் தான்" மக்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை
நாயின் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாய் கடித்தால் மட்டுமின்றி, அவை பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் நமது காயங்களில் பட்டாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூடி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் டாக்டர்.செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். ரேபிஸ் தொற்றுக்குள்ளான வீட்டு விலங்குகள் கடிப்பதால் அந்த பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. பொதுவாக நாய் கடி, கீறல் ஏற்பட்டால் அந்த காயத்தை குறைந்தது 15 நிமிடங்கள் சோப்பு மூலம் தண்ணீரால் கழுவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.