போலி பாஸ்போர்ட்.. 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் அபராதம் - மத்திய அரசு அதிரடி
மோசடி பாஸ்போர்ட் அல்லது விசா மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூபாய்.10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியேற்ற மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியா வரும் வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்ட நாட்களை கடந்து தங்கியுள்ளனரா என்பதை கண்காணிக்க வசதியாக பல்வேறு நடைமுறைகள் மசோதாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த மார்ச்11-ல் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.