எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அதிமுக்கிய அறிவிப்பு | Madurai | AIIMS Hospital

Update: 2024-05-22 05:04 GMT

எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அதிமுக்கிய அறிவிப்பு | Madurai | AIIMS Hospital

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு ஆயிரத்து 977 கோடியிலிருந்து 2 ஆயிரத்து 21 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி, விடுதிகள், IPD , OPD மற்றும் எமர்ஜென்சி பிளாக் மற்றும் AIIMS இன் பிற அத்தியாவசிய முன்னுரிமை சேவைகள் 18 மாதங்களில் முழுவதுமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் 33 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தள மேம்பாட்டிற்காக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்