ஜூலை 29 "மழை தினம்"... ரெரெயின் டே கொண்டாடுவது எப்படி?

Update: 2023-07-23 05:41 GMT

அட டேய்ல இன்னைக்கு நாம பாக்கப்போற டே.. நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு டேய்னே சொல்லலாம்… அப்டி என்ன டேயா இருக்கும்னு பாக்குறீங்களா.... அதாவது காரமா இல்ல சூடா சாப்பிட்டா உடனே நம்ம நாக்குக்கு ஜில்லுனு ஒரு ஐஸ் க்ரீம குடுத்து சந்தோசபடுத்துற மாதிரி... சூரியன் நம்ம ஊரையே சுட்டெரிக்குற நேரத்துல் ஜில்லுனு மழை பேஞ்சா எப்டி இருக்கும்… ஊரோட சேந்து மக்களோட மனசும் ஜில்லுனு ஆகிடும்…

அப்டி நம்ம உலகத்தையே சந்தோசப்படுத்துற நம்ம மழைக்கு ஒரு டே கொண்டாடலானா எப்டிங்க...? அதுனால வர 29 ஆம் தேதி உலக மக்கள் எல்லாரும் ஒன்னு சேந்து ரெயின் டேய செலப்ரேட் பன்றாங்களாம்... அதனால நாமளும் இந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுனும்... மழைக்குள்ள இருக்க பல சுவாரஸ்யமான விசயங்களையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க....

மழை தினத்தை உருவாக்கிய அமெரிக்கா...

இந்த...உன்னதமான... அற்புதமான... மகத்துவமான டேய... யாரு உருவாக்குனதுனு பாத்தா... அட வழக்கம் போல நம்ம அமெரிக்க காரங்க தான்.... அமெரிக்காவுல இருக்க பென்சில்வேனியா அப்டிங்குற கிராமத்தை சேந்த விவசாயிகள்தான் இந்த National rain day-ய உருவாக்கிருக்காங்களாம்.... அதாவது ஜூலை மாசம் வந்தா போதும், இந்த கிராமமே மழையால செழிப்பா மாறிடுமாம்... நம்ம எல்லாரையும் வாழ வைக்குற மழைக்கு நன்றி சொல்லும் விதமா, நாம ஏன் rain day கொண்டாட கூடாதுனு யோசிச்சு... ஒவ்வொரு வருசமும் ஜுலை மாசம் 29 ஆம் தேதிய ரெயின் டேவா கொண்டாட தொடங்கியிருக்காங்க... அவங்க ஆரம்பிச்சு வைச்சத தான் இப்போ உலக மக்கள் எல்லாரும் National rain dayனு கொண்டாடிட்டு இருக்காங்க.

மழை வரதுக்கு முன்னாடி மனக்க மனக்க மண்வாசை வரதை நம்ம எல்லாரும் ஃபீல் பன்னிருப்போம்… சரி இந்த வாசனை.... எதனால வருது... எங்க இருந்து வருதுன்னு பாத்தா, நம்மள ஆச்சர்யபடுத்துற மாதிரி ஒரு விசயத்தை சொல்லுறாங்க ஆய்வாளர்கள்... அதாவது மண்ணுல actinomycetes அப்படிங்குற ஒரு வகையான பேக்ட்டீரியா இருக்கு.... அது மழை பெய்யுற நேரத்துல, தான்கிட்ட இருக்க எண்ணெய் தன்மையை வெளியேத்துமாம்… அப்போ அந்த எண்ணெய் மேல மழை துளி படும்போது.... பாரதி ராஜாவின் மன்வாசனை சாரி…. நம்ம எல்லாருக்குமே புடிச்ச மண்வாசனை உருவாகுதுன்னு அறிவியல் ஆராய்ச்சியில சொல்லுறாங்க…

அந்த காலத்துலலாம் ஊருக்குள்ள மழை பெய்யலன்னு வச்சிகோங்க… உடனே வருன பகவான் நம்ம ஊருக்கு சாபம் விட்டுட்டாருனு சொல்லி… அவர் மனச சந்தோச படுத்தி மழை வர வைக்கிறதுக்காக… பாவமாக சுத்திட்டு இருந்த ரெண்டு கழுதைய புடிச்சி… கல்யாணம் பண்ணி வச்சு அதுக்கு முதலிரவே கொண்டாட வச்சிடுவாங்க...

ஆனா மெக்சிகோவுல இதுக்கெல்லாம் ஒருபடி மேலபோய்…. மழை பெய்யுறதுக்காக ஒரு வினோத வேண்டுதல ட்ரை பன்னிருக்காங்க ….

அதாவது இந்த ஊர் மேயருக்கும்… தண்ணி குள்ள திரிஞ்ச முதலைக்கும் சீரும் சிறப்புமா கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்கனா பருங்களேன்... இதுல என்ன கொடுமைனா… தன்னோட ஆசை முதலை மனைவிக்கு….மேயர் முத்தம் குடுத்து வேற கொஞ்சுறாரு... ம்ம்ம்... நல்ல வேல முதலயோட வாய் கட்டியிருந்ததுனால மேயர் தப்பிச்சாரு... இல்லனா கல்யாணம் வீடு... எழவு வீடா மாறியிருக்கும்...

நம்ம ஊர்லலாம் அக்டோபர் மாசம் ஆரம்பிச்சா போதும்.... டிசம்பர் மாசம் வரை நம்ம மேலாடைல இருந்து உள்ளாடை வரை எதையும் காயவைக்க முடியாம பன்னிடும் இந்த மழை... இப்டி மழை பெய்யுறதுக்குலாம்... எப்டியும் இந்த மாசம் மழை வந்துடும்னு... நாம ஒரு நாள் கணக்கு பன்னி வச்சிருப்போம்... ஆனா அமெரிக்காவுல இருக்க calama அப்டிங்குற இடத்துல கிட்ட தட்ட அறுபது வருஷமா மழையே பெய்யுறது இல்லையாம்.... இன்னை வரை இங்க வசிக்குற மக்கள்... எப்போ வரும்னு மழைக்காக ஏங்கிட்டு இருக்காங்லாம்...

பாவம் சாபம் வாங்குன ஊரா இருக்கும் போல.....

சரி... மழை எட்டி கூட பாக்காத ஊரா இது இருக்குனா... மழை டெய்லியும் வந்துட்டு போற ஊரா இருக்கு நம்ம இந்தியாவுல இருக்க Mawsynram அப்டிங்குற கிராமம்.... இது மட்டும் இல்லாம உலகத்துலயே அதிகமா மழை பெய்யக் கூடிய இடமாவும் இருக்கு இந்த இடம்.... இப்டி விடாம பெய்யுற மழையால, உலகிலேயே ஈரமான பகுதினு இந்த கிராமத்துக்கு கின்னஸ் ரெக்காடும் கொடுத்துருக்காங்க... ஹ்ம்ம் வாழ்ந்தா இப்டி ஒரு ஊர்ல வாழனும் டா...

பொதுவா மனுசங்க, விலங்குங்க எதாச்சும் சாதனை பன்னா தான்... வோல்டு ரெக்கார்டு, கின்னஸ் ரெக்கார்டுனு எதாச்சும் அவார்டுலாம் குடுப்பாங்க... இல்ல எதாச்சும் குப்பை அவார்டு ஷோக்கு போய்.... சும்மா நின்னாலே அவார்டு குடுப்பாங்க...

ஆனா இங்க நம்ம ஆளுங்க மழைக்கே அவார்டு குடுத்துருக்காங்கப்பா... எது மழைக்கு அவார்டா ? அப்டி என்ன அவார்டுனு பாத்தா.... World Meteorological Organizationஐ சேர்ந்தவங்க அமெரிக்காவுல இருக்க marylandல… ஒரு டெஸ்ட்டு பண்ணிருக்காங்க... அந்த டெஸ்டுல ஒரு நிமிஷத்துகுள்ள 1.23inch அளவு மழை பெய்துருக்கு... இதை பார்த்து வாயடச்சு போனவங்க... ஒரு நிமிசத்துல அதிகமா பேஞ்ச மழை இது தான்னு.... Greatest rainfall in one minute அப்டினு மழைக்கே ஒரு அவார்டை தூக்கி கொடுத்துட்டாங்க...

உலக சினிமாவுல ஆரம்பிச்சு உள்ளூர் சினிமா வரை..... மழை அப்டிங்குறது தவிர்க்க முடியாத விசயமா இருக்கு...

ஹிரோயின் கிட்ட லவ்வ சொல்லும் போது மழை , சண்டை சீன் வரும்போது மழை , சோக சீன்னா மழை , பாட்டு , காமெடி , டான்ஸ்னு… மழை இல்லாத சீனே கிடையாதுனு சொல்லலாம்… அதாவது பிரிக்க முடியாதது மழையும் சினிமாவும் , சேர்ந்தே இருப்பது மழையும் சினிமாவும் , பிரிய கூடாதது மழையும் சினிமாவும்னு.... மழை நம்ம சினிமாவோட பின்னி பினைஞ்சு இருக்குனா பாருங்களேன்

சரி... மழைய பத்தின இன்ட்ரெஸ்டிங்கான விஷயங்களையெல்லாம் பார்த்தாச்சு... அடுத்து நமக்கு பிடிச்ச இந்த rain dayய எப்படி கொண்டாடுறதுன்னு பார்க்கலாம் வாங்க...

ஸ்டேட் கவர்மென்ட் , சென்ட்ரல் கவர்மெண்டே குடுக்காத ஸ்கூல் லீவ... வேற யாரால குடுக்க முடியும்னு பாத்தா... அது நம்ம மழையால மட்டும் தான் முடியும்...

அதுலயும் நியூஸ் சேனல் பாக்காத குழந்தைங்க கூட... மழை பெய்யுற அன்னைக்கு தவறாம வெதர் நியூஸ பாத்துடுவாங்க... ஏனா அதுல தான் நாளைக்கு ஸ்கூல் லீவா... லீவு இல்லையாங்குற தீர்ப்பே அடங்கிருக்கும்... சில நேரம் தீர்ப்பு பசங்களுக்கு சாதகமா வரலாம், இல்லனா பாதகமாவும் வரலாம். இந்த மாதிரியான அந்த பீல்குட் மெம்மரியை rain day அன்னைக்கு மத்தவங்களோட சேர் பன்னிக்கோங்க...

நம்ம ஊர் இருக்க கிளைமட்டுக்கு எப்போ வேணும்ன்னாலும் மழை வரும்... அதனால மழை வரும்போதே… அதை ரசிச்சு வீடியோ எடுத்து உங்க மனசுக்கு பிடிச்ச மழை சாங்கை ஸ்டேட்டஸ்ஸா வைக்கனுமாம்...

மழைனா உங்களுக்கு என்ன நியாபகம் வரும்னு கேட்டா… இளையராஜா , ஏ ஆர் ரகுமான் , முருக்கு , காஃபி , லவ்வரு என்னென்னமோ சொல்லுவாங்க… அதுனால 29 ஆம் தேதி மழை பெய்யுதோ, இல்ல வெயில் அடிக்குதோ... கிளைமேட் என்ன கன்டிசன்ல இருந்தாலும்.... சுட சுட பஜ்ஜி , முறுக்கு , பலகாரம் செஞ்சு rain dayய செலப்ரேட் பன்னனுமாம்

முக்கியமா நீங்க சின்ன வயசுல பாடி விளையாடுன…. மழை வருது… மழை வருது நெல்லு அள்ளுங்க …. முக்கா படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க… இதுமாதிரி எதாவது ஒரு பாட்ட உங்க வீட்டு குழந்தைங்களுக்கு சொல்லி குடுத்து, மழை டேய செலப்ரேட் பன்னனுமாம்முடிஞ்சா மழையில ஒரு ஒரு ஆட்டத்தபோடுங்க.... ஆனா இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் என்னன்னா... மழை வேணும்ன்னா மரம் வளர்போங்குற மெசேஜையும் உங்க சோஷியல் மீடியா பேஜ்ல ஷேர் பண்ணி Happy raindayநு கையோட விஷ் பண்ணிருங்க....

Tags:    

மேலும் செய்திகள்