ஒருவரை சுத்து போட்டு கத்தி, பீர் பாட்டிலால் கொலைவெறியில் தாக்கிய 20 பேர்.. தடுக்க வந்த மூவருக்கு நேர்ந்த கதி.. விருத்தாசலத்தில் பதற்றம்
விருத்தாச்சலம் அருகே உள்ள குறவன்குப்பத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர், கானாங்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ராஜா மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பல், சித்தார்த்தனை பீர் பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த பாலாஜி, வேலழகன், பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் தடுத்தபோது, அவர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சித்தார்த்தன் உள்ளிட்ட 4 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், பலத்த காயம் அடைந்த சித்தார்த்தன், பிரகாஷ் ஆகிய இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உள்ளிட்ட 20 பேர் சேர்ந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.