திருநங்கையோடு கடலுக்கு குளிக்க சென்ற பெண்களை விரட்டி விரட்டி கொலைவெறி தாக்குதல் - வைரல் வீடியோ

Update: 2024-12-26 05:04 GMT

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா நகரை சேர்ந்த பவானி - முத்து தம்பதி, திருநங்கை யாழினி உட்பட 7 பேர் பெரியகுப்பம் மீனவ கிராம கடற்கரைக்கு குளிக்க சென்றனர். கடலில் குளித்துவிட்டு வந்த பெண்களிடம் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தட்டிக்கேட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில், புதுச்சத்திரம் போலீசார் தானாக முன்வந்து பாதிக்கப்பட்ட பவானியிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் தாக்குதலில் ஈடுபட்டதாக தினேஷ், மாணிக்கவேல், சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்