இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. சேத்தன் சர்மா விலகியதால் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. அடுத்த தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தேர்வாகலாம் என தகவல் பரவி வந்த நிலையில், ஐபிஎல்லில் டெல்லி அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து அகர்கர் விலகினார். இந்த சூழலில், தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் தருவதாக பிசிசிஐ தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும், அதனை ஏற்ற பின்னரே அகர்கர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2020ஆம் ஆண்டு அகர்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.