வகுப்பை புறக்கணித்து திடீர் ஆர்ப்பாட்டம்... மாணவர்கள் எடுத்த எதிர்பாரா முடிவால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை, ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழாம் வகுப்பு மாணவி யாழினி கடந்த வெள்ளிக்கிழமை கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், கவனக்குறைவாக இருந்ததாக தலைமை ஆசிரியர் சுமதியை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.