தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு நள்ளிரவில் சென்ற அரசு பேருந்து ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என நடத்துனர் கிருஷ்ணகுமார் என்பவர் தெரிவித்துள்ளார். இதையறிந்த பொதுமக்கள் புதுக்குடியில் பேருந்தை சிறைபிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு வந்த போலீசார் நடத்துநரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து கழக பணியாளர்கள் நடத்துனரின் விபரங்களை கேட்டறிந்து எச்சரித்து அனுப்பினர்.