கிணற்றில் குதித்த பெண்...இரவு முழுவதும் நீரில் தத்தளிப்பு - காலையில் மீட்ட அதிர்ச்சி காட்சிகள்
கோபிசெட்டிபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண், பொதுக்கிணற்றில் இரவு முழுவதும் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தாசம்பாளையத்தை சேர்ந்த மல்லிகா என்பவர், 2 ஆண்டுகளாக மனநலம் பாதித்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு ஊர் பொதுக்கிணற்றில் குதித்த அவர், மின்மோட்டார் கயிற்றை பிடித்தபடி தத்தளித்து வந்துள்ளார். காலையில் இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்க, அவர்கள் விரைந்து கயிறு மூலம் மல்லிகாவை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.