கோயிலில் திருடிய நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள் - அதிர்ச்சி வீடியோ
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கோயிலுக்குள் புகுந்து திருடிய நபரை, அப்பகுதி மக்கள் தரும அடி கொடுத்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். பாப்பாக்குடி அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன், நத்தம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குள் புகுந்து பித்தளை தட்டு, மணி ஆகியவற்றை திருடினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை தரும அடி கொடுத்து மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும் விசாரிக்கையில் ஏற்கனவே அவர் நத்தம் மாரியம்மன் கோயில் அருகேயும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.