இரு மடங்காக உயர்ந்த பேருந்து கட்டணம் - மக்கள் வேதனை

Update: 2023-06-29 01:53 GMT

பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, தனியார் பேருந்துகளின் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்...பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பக்ரீத் பண்டிகை விடுமுறையோடு சேர்த்து வார விடுமுறையும் இருப்பதால், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனிடையே, தனியார் பேருந்துகளின் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி செல்வதற்கு பேருந்து கட்டணம் 600 ரூபாய் முதல் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ஆரம்ப கட்டணமே ஆயிரத்து 300 ரூபாய் என இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்