அழையா விருந்தாளியாக வந்த 6 அடி ஜந்து..! பீதியில் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள் | Chidambaram

Update: 2024-12-26 04:25 GMT

சிதம்பரம் அருகே நள்ளிரவில் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் முதலை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பழைய கொள்ளிடம் ஆற்றை ஒட்டி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், ஆற்றில் இருந்து வெளியேறிய முதலை நேற்று நள்ளிரவு தெற்கு சாலியாந்தோப்பு செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர். 6 அடி நீளம், 150 கிலோ எடையும் கொண்ட அந்த முதலை குறித்து தகவலறிந்து போலீசார், தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் வந்த நிலையில், நீண்ட நேரம் போராடி முதலையை லாவகமாக பிடித்து வக்கரமாரி ஏரியில் விடுவித்தனர். முதலையால் கிராம மக்கள் கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் பீதியில் உறைந்து போயிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்