சாலையில் இருந்த நபர் மீது ஏறி இறங்கிய கார்...காரில் இருந்த 2 அடையாளங்கள் - பதறவைக்கும் காட்சிகள்
உத்தரப்பிரதேசத்தில் சாலையில் அமர்ந்திருந்த நபர் மீது கார் ஏறிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. காஸியாபாத் கவிநகர் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலையில் அமர்ந்து இருந்த ஒரு நபர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று ஏற்றிச் சென்றது. பா.ஜ.க கொடி மற்றும் ஸ்டிக்கர் அந்தக் காரில் ஒட்டப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த நபர் உயிரிழந்ததை அடுத்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இறந்தவரின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.