ரேஷன் அரிசியை சாப்பிட்ட பறவை, பசுமாடுகள் உயிரிழப்பு

Update: 2022-10-17 02:23 GMT

ரேஷன் அரிசியை சாப்பிட்ட பறவை, பசுமாடுகள் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே வாய்க்கால்களில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசியை சாப்பிட்ட 2 பசு மாடுகள் உயிரிந்த‌ன.

மயிலாடுதுறை சித்தர்க்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு சேமிப்பு கிடங்கில் ரேஷன் கடை அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசி மூட்டைகளை எலிகள் மற்றும் பூச்சிகள் தாக்காமல் இருக்க, அரிசி மூட்டைகளுக்கு அடியில் விஷ மாத்திரைகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேமிப்பு கிடங்கில் வீணாகும் அரிசிகளை பணியாளர்கள் வெளியே கொட்டிய நிலையில், அந்த அரிசியை சாப்பிட்ட 2 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த‌தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த அரிசியை சாப்பிடுவதால், அப்பகுதியில் உள்ள மயில் உள்ளிட்ட பறவைகளும் உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்