"ஓபிஎஸ் உடன் சேருங்க.. ஈபிஎஸ்-க்கு அண்ணாமலை மெசேஜ்" - பின்னணி உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி
ஆதரவு நிலைப்பாட்டில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் நுணுக்கமாக செயல்படுவதாக, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், அதிமுக என்றால் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸும் இணைந்த இரட்டை தலைமை தான் என்றும், இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் தான் சின்னம் கிடைக்கும் எனவும் கூறினார். ஒருவேளை தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் சின்னம் முடங்கும் என சொன்ன அவர், அதை நோக்கி தான் கள நிலவரம் நகர்வதாகவும் தெரிவித்தார்.
இச்சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை மிகவும் நுணுக்கமாக கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் ரவீந்திரன் துரைசாமி கூறினார். இருவரும் இணைய வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாகவும், இணையாவிட்டால் பாஜக தனித்து களமிறங்கி பலத்தைக் காட்ட முயற்சி செய்வார் எனவும் சொல்லியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் முடங்கினால் அது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என அண்ணாமலை எதிர்பார்ப்பதாகவும், இடைத்தேர்தலில் நின்று வாக்கு வங்கியை நிரூபிக்க வாய்ப்பிருப்பதாகவும் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.