தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மரியாதை...சொகுசு ஓட்டலில் மதிய விருந்து - சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி மக்கள் நலச்சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் 80 பேருக்கு உயர்தர சைவ உணவகத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
தூய்மை பணியாளர்களோடு மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் நல சங்க நிர்வாகிகளும்
உணவை உட்கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நல சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சேவையை ஆண்டுதோறும் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.