நவரத்தினக் கல்லை நம்பி சென்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு அதிர்ச்சி - சினிமா பாணியில் நடந்த பயங்கரம்

Update: 2023-07-18 07:04 GMT

திண்டுக்கல்லில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நவரத்தினக் கல் விற்றுத் தரக்கோரி, 5 லட்சம் ரூபாயை மோசடி செய்து தப்பிய கும்பலை, சினிமா பாணியில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சையது ஒலி. இவரை திண்டுக்கல்லை சேர்ந்த பாலகிருஷ்ணன், குமரியை சேர்ந்த சீனு, பினோய் தொடர்பு கொண்டு, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுலைமான் கல் எனப்படும் நவரத்தின கல் இருப்பதாக கூறியுள்ளனர். இதனை விற்றுத் தந்தால் 50 கோடி ரூபாய் கமிஷன் தருவதாக கூறியதால், சையது ஒலி திண்டுக்கல் சென்றார். ஓட்டலில் அவரை சந்தித்து நவரத்தின கல்லை காண்பித்து, முன்பணமாக 5 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பியோடினர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சையது ஒலி, 50 லட்சம் ரூபாய்யை திருடிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த போலீசார், நெடுஞ்சாலையில் விரட்டிச் சென்று தோமையார்புரத்தில் சீனு மற்றும் பினோயை சுற்றி வளைத்து கைது செய்தனர். தலைமறைவான பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர். விசாரணையில், அதிகமான தொகை பறித்துவிட்டாக கூறினால்தான் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று சையது ஒலி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்