கோவாவில் பாஜகவில் இணைந்த 8 எம்எல்ஏக்கள் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ளனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் திகாம்பர் காமத், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மைக்கேல் லோபோ உட்பட 8 எம்எல்ஏக்கள் கடந்த 14ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்துடன் 8 எம்எல்ஏக்களும் டெல்லி சென்றுள்ளனர்.
அவர்களுடன் பாஜக மாநில தலைவர் உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர். அனைவருடன் சேர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.