கோர தாண்டவம் ஆடிய இயற்கை.. 1000ஐ தாண்டும் பலி எண்ணிக்கை.. கிம் ஜாங் முடிவால் மிரண்டு போன உலகம்

Update: 2024-09-05 02:09 GMT

வடகொரியாவை உண்டு இல்லை என ஆக்கி விட்டது சிலநாள்களுக்கு முன் கொட்டித் தீர்த்த கனமழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்...

வெள்ளத்தில் சிக்கி உயிரை விட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன...

கனமழையால் வடமேற்கு நகரமான சினுய்ஜு மற்றும் அண்டை நகரமான உய்ஜுவில் 4,100 வீடுகள், 7,410 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பல கட்டடங்கள், சாலைகள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது...

மிகப்பெரிய உயிர் சேதத்தைத் தடுக்கத் தவறியதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் தண்டனை வழங்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 30 அதிகாரிகள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன...

மேலும் பல உயரதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது...

இதனால் அனைத்து அதிகாரிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்...

வெள்ள பாதிப்பைத் தடுக்கத் தவறியதாக அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்