#Trump தோற்றால்... சிறை செல்வாரா #ElonMusk..? பரபரப்பில் #USA | Trump | Elon Musk

Update: 2024-10-10 16:24 GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மட்டும் ட்ரம்ப்பைத் தோற்கடித்து வெற்றி பெற்றால் தான் சிறைக்கு செல்வது நிச்சயம் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க்... ட்ரம்ப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஸ்க், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்... அப்போது, "ட்ரம்ப் தோற்று விட்டால் நான் அவ்வளவுதான்...என்னுடைய சிறைக்காலம் எவ்வளவு இருக்கும்?...நான் என் குழந்தைகளைப் பார்க்க முடியுமா?... எனக்குத் தெரியவில்லை" என நகைச்சுவையாக கூறினார்... ட்ரம்ப் வெற்றி பெறவில்லை என்றால் இது தான் நாம் சந்திக்கும் கடைசித் தேர்தல் என்று தெரிவித்த மஸ்க், பல சட்ட விரோதங்களை சட்டப் பூர்வமாக்குவார்கள் என்றும், ஒற்றை கட்சி ஆட்சி முறைக்குத் திரும்பும் எனவும் எச்சரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்