இலங்கை உயர்நீதிமன்றத்தில் பயங்கர தீ விபத்து - ஆவணங்களுக்கு பாதிப்பு இல்லை என தகவல்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

Update: 2020-12-16 03:03 GMT
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 9 வாகனங்களில் விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு போலீசார் 3 சிறப்பு குழுக்களை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், உயர்நீதிமன்றத்தில் குப்பைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலே தீ விபத்து நேரிட்டது என்றும் இதில் ஆவணங்கள் எதுவும் சேதமாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்