36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள் | Tollgate
தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், இது பொதுமக்களை பாதிப்பதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், கணியூரில் உள்ள சுங்கச்சாவடியில், கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்ததால் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.