தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளதாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 72 புள்ளி மூன்று இரண்டு சதவீத பணியிடங்கள் வடமாவட்டங்களில் இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் வடக்கு மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வடமாவட்ட ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.