ஐபோன் கேட்ட 17 வயது இன்ஸ்டா காதலன் - யோசிக்காமல் 15 வயது சிறுமி செய்த செயல்

Update: 2024-06-13 04:55 GMT

திருப்பூரில் இன்ஸ்டா காதலனான 17 வயது சிறுவன் ஐபோன் கேட்டதால், தாயின் 7 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு 15 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நகைகள் மாயமானதையும், சிறுமியின் கையில் புதிய ஐபோன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், சிறுமியிடம் விசாரித்த போது அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகாரளித்த நிலையில், சிறுவனை பிடித்து ஐபோனை பறிமுதல் செய்திருக்கும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்