தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-22 14:04 GMT

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கொதிகலனை குளிர்விப்பதற்காக கடல் நீர் உள்ளே செல்ல கால்வாய் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, கால்வாய் முழுவதும் சாம்பல் புகுந்த‌தால், ஒரு மாதம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த‌து. இதையடுத்து, 6 மாதங்களுக்கு முன்பு, சாம்பல் உட்புகாமல் இருக்க புதிய கால்வாய் 6 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழையால், பகுதிக்கு கடல் நீர் உள்ளே கொண்டு செல்லும் கால்வாயில் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், சாம்பல் உட்புகுந்து, கடல்நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 15ஆம் தேதியில் இருந்து ஒருவாரமாக முதல் மூன்று யூனிட்களிலும், 630 மெகாவாட் மின் உற்பத்தி தடை பட்டுள்ளது. பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சாம்பல் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்த‌து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்