புதிய அரசியல் கட்சி தொடக்கம்.. தொண்டர்கள் முன் கொடியை அறிமுகம் செய்த வாழவந்திநாடு சரவணன்

Update: 2024-12-22 14:05 GMT

தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள வாழவந்திநாடு சரவணன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ள அவர், அதன் முன்னோட்டமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த விழாவில் கட்சியின் கொடியை தொண்டர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், கல்வி, வேலைவாய்ப்பை போல அரசியலிலும் 69 சதவீத இடஒதுக்கீடை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறினார். மேலும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 10 இடங்களில் நிச்சயமாக போட்டியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்