குட்டி யானையை மடக்கி பிடித்த போலீஸ்..ஏற்றப்பட்ட இரண்டு உயிர்கள் - விசாரனையில் வெளியான பகீர் உண்மைகள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே இரவு நேரத்தில் மாடுகளை திருடி, இறைச்சி கடைக்கு விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
வல்லாஞ்சேரி பகுதியை சேர்ந்த நவீன் என்பவர், தன் வீட்டின் அருகாமையில் கட்டி வைத்திருந்த எட்டு மாடுகளை காணவில்லை என கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது டாட்டா ஏஸ் வாகனத்தில் இரண்டு மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது. அதை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர்கள், மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதில் ஈடுபட்ட காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர், பெருமாட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.