பிரபல வாக்மேட் காலணி நிறுவனத்தின் தூதராக சஞ்சு சாம்சன் நியமனம்

Update: 2024-12-22 14:09 GMT

முன்னணி காலணி உற்பத்தி நிறுவனமான வாக்மேட் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக, பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் வாக்மேட் நிறுவனம், பணிச் சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துடன் இலகுவான எடையில் புதிய வகை காலணி தயாரிப்புகளுடன் சர்வதேச சந்தையில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், துபாயில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாக்மேட் நிறுவனத்தின் இயக்குனர் ரோஷன் பஸ்டியான், வாக்மேட் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதரான கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனை வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்