ரோட்டை பார்த்து ஓட்டாமல் குஜாலாக பஸ் ஓட்டிய டிரைவர் - திகிலடித்து பயணி எடுத்த வீடியோ வைரல்
திருநெல்வேலியில், விதிகளை மீறி, செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டே ஓட்டுநர் பேருந்து ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை சிப்காட் பணிமனையில் இருந்து நாகர்கோயிலுக்கு புறப்பட்டுச் சென்ற அந்த பேருந்தில், ஓட்டுனர் முன்பக்கம் செல்போன் வைத்து, காதில் ஹெட்போன் அணிந்து வீடியோ பார்த்தபடி திருநெல்வேலியை வந்தடைந்தார். இந்த காட்சியை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.