குண்டு குழியுமான சாலை எம்.சாண்ட் போட வந்த அதிகாரிகள் சுற்றி வளைத்த மக்கள்

Update: 2024-11-02 13:30 GMT

ஆரணி டவுன் காந்தி சாலை ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகில், சாலை நடுவே குண்டு குழியுமாக இருந்தது. அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பெரிதும் அவதிக்குள்ளாயி சாலையை கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டன. இந்த நிலையில், அந்த சாலையில் 3 பேர் பைக்கில் பயணித்த நிலையில், கார் மோதிய விபத்தில், விக்னேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில், குண்டு குழியுமான சாலையை எம்.சாண்ட் மணல் கொண்டு நிரப்ப, அதிகாரிகள், டிராக்டரில் மணலை கொண்டு வந்தனர். அப்போது அந்த பகுதி நகரமன்ற உறுப்பினர்

சுதாகுமார் தலைமையில் பொதுமக்கள் டிராக்டரை சிறைப்பிடித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இன்னும் 2 தினங்களில் முழுமையாக ஜல்லி மூலம் நிரப்பி நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்