திருத்தணியை நடுங்கவிட்ட 2 குழந்தைகள்,தாய் மரணத்தில் - அதிர்ச்சி திருப்பம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பிரேம்குமார் என்பவரது வீட்டின் முன், கடந்த 6-ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் தீப்பிடித்த நிலையில், வீட்டிலும் தீப்பற்றி புகை மூட்டம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்த 2 குழந்தைகள், கணவன் -மனைவி என 4 பேரும் தப்பிக்க முயற்சித்த போது தீயில் சிக்கியதில், 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 3 பேர் பலியாகினர். இந்நிலையில், தீ விபத்து ஏற்படும் போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பிரேம்குமாரின் உறவினர்கள், விபத்தின் பின்னணியில் சதிச்செயல் உள்ளதா என சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.