நகர்மன்ற தலைவரின் கணவர் செய்த செயல்.. நிறுவனம் கொடுத்த புகாருக்கு வந்த பதில்

Update: 2024-08-09 05:58 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டதாக எழுந்த குற்றச்ச்சாட்டில், நகர மன்ற தலைவர் விளக்கமளித்துள்ளார்.

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நவசாய் மீடியா என்ற நிறுவனத்தின் பெயரில் அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், நகர் மன்ற தலைவருடைய கணவரால் அகற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. குறிப்பாக, விளம்பர பதாகைகள் அமைக்க கூடுதல் பணம் லஞ்சமாக கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக நமது செய்தியாளருக்கு நகர் மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் விளக்கமளித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட விளம்பர பதாகைகள் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகவும், அவற்றால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக தகாத முறையில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்