"கால தொட்டு கேட்டுக்குறேன்" - பள்ளி தாளாளர் காலில் விழுந்து கெஞ்சிய பாமக MLA

Update: 2024-12-23 09:00 GMT

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தனியார் பள்ளி விளையாட்டு மைதானம் ஏற்கனவே விற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பள்ளிக்கட்டிடங்கள் வேறு ஒரு தனியாருக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த பெற்றோர், பள்ளி நுழைவாயில் முன்பு திரண்டு, பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பா.ம.க எம்.எல்.ஏ. அருள், பள்ளித் தாளாளரிடம் பேச்சு நடத்தியபோது, திடீரென அவரது காலில் விழுந்து கெஞ்சியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்